ரூ.50 இலட்சம் வரை மானியம் உதவி... தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
தேசிய கால்நடை இயக்கத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கமானது புறக்கடை கோழிவளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றிவளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்கும் முனைவோர் ஆயிரம் நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்து கோழிக்குஞ்சுகள் பொறிப்பகம் வழியாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி 4 வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 சதவீதம் மானியம், அதிக பட்சமாக ரூ.25 இலட்சம் வரை வழங்கப்படும்.
ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் மற்றும் 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில் மூலதனமாக 50 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.50 இலட்சம் வரை இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
பன்றி பண்ணை அமைக்கும் முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.30 இலட்சம் வரை வழங்கப்படும்.
தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஓர் ஆண்டில் 2000 முதல் 2400 மெட்ரிக் டன் வைக்கோல், ஊறுகாய் புல் ஒரு நாளில் 30 டன் மொத்த கலப்பு தீவனம் தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ளும் முனைவோருக்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில் மூலதனத்தில் 50 சதவீத மானியம் அதிகட்சமாக ரூ.50 இலட்சம் வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தனிநபர், சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டுபொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர் ஆவார்.
முனைவோர்கள் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். தொழில்முனைவோர் தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்திரவாதத்தை பெற வேண்டும். திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தையும் பெற வேண்டும்.
எனவே, இத்திட்டம் குறித்த முழுமையான தகவல் பெற https://www.udyamimitra.in/ என்ற இணையதளம் வாயிலாகவும் அல்லது அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறலாம்.
சேலம் மாவட்டத்திற்கு 50 பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம்தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments