Breaking News

புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

 காஞ்சிபுரம் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் துவக்கி  வைத்து மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் இன்று சென்னையில் பாரதி  கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் நிகழ்வினை துவக்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் துவக்கி வைத்து மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் 1989-ஆம் ஆண்டு ஏழை பெண்களின் திருமண உதவித்திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலில் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்திற்கான கல்வி தகுதி  8-வது வரை படித்த பெண்களுக்கு நிதியுதவி 5,000 வழங்கப்பட்டது, பின்வரும் காலங்களில் பெண்களுக்கு நிதியுதவி 5.000 திலிருந்து 10,000 ஆகவும், 10,000 திலிருந்து 15,000 ஆகவும் பின்பு 15,000 திலிருந்து 20,000 வரை நிதியுதவி தந்து பெண்கள் படித்திட திட்டம் தீட்டப்பட்டது. 



அதேபோல் கல்வி தகுதி 8லிருந்து 10 ஆம் வகுப்பாகவும், பின்னர்  12 வகுப்பு,  தற்பொழுது பட்டயப்படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தினை துவங்கி முறையாக செயல்படுத்தாதால் மக்கள் இத்திட்டத்தின் மூலம் சரியாக பயன்பெற முடியவில்லை.  

இதனை கருத்தில் கொண்டு நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தி இன்று மாணவியர்கள் வாழ்வில் மேம்பட செயல்வடிவம் தந்துள்ளார். கடந்த நிதியாண்டில் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தினை தற்பொழுது  மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர் கல்வி நிதியுதவி திட்டமாக மாற்றம் பெற்று புதுமைப்பெண் திட்டமாக  செயல்படுத்தப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 10 கல்லூரிகளை சார்ந்த 647 மாணவிகளுக்கு பற்று அட்டை (Debit Card) வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுமார் 1795 மாணவிகளுக்கு பற்று அட்டை (Debit Card)  வழங்க நடவடிக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்ச்சியாக நடைபெறும் திட்டம் என்பதால் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் சென்றடையும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இன்று வருகை புரிந்துள்ள மாணவிகளுக்கு வரவேற்பு பை வழங்கப்பட்டுள்ளது. அத்தொகுப்பு பையானது, இரண்டு புத்தகங்கள் (1.தொழில் வழிகாட்டி புத்தகம், 2. நிதி பற்றிய சிறு புத்தகம்) மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். வழங்கப்பட்டுள்ள பற்று அட்டை Pre Activate செய்யப்பட்டுள்ளது. பணம் வங்கி கணக்கில் வரப்பெற்ற விவரம் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தினை மாணவிகள் முறையாக பயன்படுத்தி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றி கொள்ளுமாறு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர்கள் திருமதி.மலர்க்கொடிகுமார் (காஞ்சிபுரம்), திரு.தேவேந்திரன் (வாலாஜாபாத்), திரு.கருணாநிதி (திருப்பெரும்புதூர்) ஆகியோர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments