1 டன் எடையுள்ள காப்பர் கம்பிகளை திருடிய 2 காவலாளி உட்பட 4 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் தனியார் கார் உதிரிபாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காப்பர் கம்பிகள் அதிக அளவில் காணாமல் போகி உள்ளதாக தொழிற்சாலையின் மேலாளர் சேரன் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் முதலில் தொழிற்சாலை காவலாளிகளான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுப்ரத் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த விபின்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை CCTV சோதனையிட்ட போது தொழிற்சாலைக்கு தண்ணீர் கேன் சப்ளௌ செய்து வரும் பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்த நாகராஜன் உடன் காவலாளிகள் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.
மணிகண்டனிடம் போலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் பல முறை காவலாளிகள் தன்னை சந்தித்து தொழிற்சாலையில் காப்பர் அதிகளவில் வந்து செல்கிறது.
இதனை நாம் திருடி எடைக்கு போட்டு வரும் தொகையை பிரித்துக் கொள்ளலாம் என தெரிவித்ததாகவும் அதன் பேரில் தனது தண்ணீர் கேன் சப்ளைக்காக டாடா ஏஸ் வாகனம் எடுத்து வரும் பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் உதவியுடன் தண்ணீர் காலி கேன் ஏற்றிச் செல்வது போல் வந்து காப்பர் கம்பிகளை எடுத்து சென்றதாகவும் நாகராஜன் போலிசார் விசாரணையில் கூறியுள்ளான்
மேற்படி வடமாநிலத்தை சேர்ந்த 2 காவலாளிகள் உட்பட தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நாகராஜன் மற்றும் டாடா ஏஸ் உரிமையாளர் மணிகண்டன் ஆகிய நால்வரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நால்வரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments
Thank you for your comments