Breaking News

காக்காயம் சுடுகாடு எரிவாயு தகனமேடை டெண்டரிலும் லஞ்சம் கேட்கும் அவலம்

சேலம், செப்.26-

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட காக்காயம் சுடுகாடு எரிவாயு தகனமேடை உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சேலம் மாநகராட்சி டெண்டர் முடிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. 



தற்சமயம் அமைதி டிரஸ்ட் மூலம் இயங்கி வருகிறது. டெண்டர் எடுப்பதற்கு பலமுறை பெட்டிஷன் கொடுத்தும் மாநகராட்சி கண்டு கொள்ளவில்லை. இதில் மாநகராட்சி ஆணையாளர் லஞ்சம் கேட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் கூட கொள்ளையடிக்கும் சேலம் மாநகராட்சி கும்பல், மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளாமல் உள்ளார். நடவடிக்கை எடுக்கப்படுமா?

இந்த சுடுகாட்டில் தொலைபேசி கடந்த மூன்று வருடங்களாக தொலைபேசி இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




No comments

Thank you for your comments