மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகை... காமாட்சி அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம்
- மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்தார்.
- காஞ்சிபுரம் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் ஆலயத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
- இதனால் 2மணி நேரத்திற்கும் மேலாக தரிசனம் ரத்தால் வரிசையில் காத்திருந்து முண்டியடித்து கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம்
வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிற்பகல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதன்பின் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வருகை புரிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சமய அறநிலைத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் தாமரை மலர்கள், வஸ்திரங்கள் மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஏலக்காய் முந்திரி பொருட்களான மாலையை கோயில் நிர்வாகம் சார்பில் அணிவிக்கப்பட்டு குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.
அதை எடுத்து பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 20 நிமிடங்கள் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மத்திய நிதி அமைச்சர் வருகையையொட்டி சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனமானது நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலானது ஏற்பட்டு நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பிய பிறகே பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு சென்று சாமி தரிசனம் செய்யும் சூழல் உருவானது.



No comments
Thank you for your comments