Breaking News

சோனா தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா... 1594 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு

சேலம் :

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் பல்கலைக்கழக கலையரங்கில் கோலகலமாக நடைபெற்றது. கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்பித்தார்.



சிறப்பு விருந்தினராக எமரிட்டஸ் பேராசிரியர் மற்றும் உயிரியல் அறிவியல் தேசிய மையத்தின் முன்னாள் இயக்குனருமான பத்மஸ்ரீ டாக்டர்.கிருஷ்ணசுவாமி விஜயராகவன் மற்றும் சென்னை எஸ்.ஆர்.என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்தியன் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு 15 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், ரேங்க் ஹொல்டர்ஸ் 40 மாணவ மாணவிகளுக்கு உட்பட 1594 மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இதனைதொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் பேசியது சிறந்த உட்கட்டமைப்பு, மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் ஒரே வருடத்தில் பல விருதுகளை பெற்றுள்ளது என்றனர். 

மேலும் சர்வதேச தரத்தில் செயல்பட்டுவரும் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் எங்கு சென்றாலும் தனிச்சிறப்போடு விளங்கி கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத்தந்து வருகிறார்கள் என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் தெரிவித்தனர் மேலும் சிறப்பான கல்வி சேவையை அர்ப்பனித்த பேராசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

கல்லூரியின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்குகேற்ப தங்களின் ஆற்றலை நாள்தோறும் வளர்த்து கொண்டு திறம்பட செயலற்ற வேண்டும்  மற்றும் இந்த வருடம் மாணவர்களுக்கு அதிக சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். 

இந்த விழாவில் சோனா கல்விக்குழுமத்தின்  முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments