Breaking News

"நமது நகரம் நமது பொறுப்பு"... துப்புரவு பணிகளில் ஈடுபட்ட மேயர், கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

 காஞ்சிபுரம் 

  • "நமது நகரம் நமது பொறுப்பு" எனும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்ட மேயர், கவுன்சிலர்கள், மற்றும் தன்னார்வலர்கள். 
  • வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார்கள்.



தமிழகம்  முழுவதும் நகர்ப்புறங்களில் "நமது நகரம் நமது பொறுப்பு" எனும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் தூய்மை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் சனிக்கிழமையான இன்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.



காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தன்னார்வலர்கள் திடக்கழிவு மேலாண்மை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் வீதி வீதியாக சென்று  சென்று பிளாஸ்டிக் கழிவு பொருட்களை மூட்டைகளில் சேகரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், 4வது மண்டல குழு தலைவர் மோகன், மாநகராட்சி கவுன்சிலர்கள்,கட்டிட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments