Breaking News

அண்ணா சைக்கிள் போட்டி.... பங்கேற்க மாணவ/மாணவிகளுக்கு அழைப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி  நடைபெற உள்ளதால்,  போட்டியில் பங்கேற்க மாணவ/மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் சார்பாக மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி மாணவ/மாணவிகளுக்கு 15.09.2022 அன்று காலை 7.00 மணிக்கு காஞ்சிபுரம், பழைய ரயில் நிலையம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. கல்லறை அருகில் துவங்கி வையாவூர் சாலை வழியாக வையாவூர், கரூர் வரை நடைபெற உள்ளது. 

 இது குறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில்: 

13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி-மீ.தூரம்., மாணவியர்களுக்கு 10 கி.மீ.தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ.தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ.தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ.தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ.தூரமும் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ/மாணவியர்கள் இந்தியாவில் தயாரான மிதி வண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து Bonafide Certificate,  பிறப்புச் சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும்.  14.09.2022 அன்று மாலை 4.00 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்ளுக்கு  பரிசுத் தொகையாக தலா ரூ.5000/-, தலா ரூ.3000/-, தலா ரூ.2000/- வீதமும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250/- வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும்.  வீரர்/வீராங்கனைகள் 15.09.2022 அன்று போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே கொண்டு வர வேண்டும்.  

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இனைஞர் நலன் அலுவலர் அவர்களை கைபேசி எண்ணில் 7401703481 தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments