விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் உதவிகளை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம், விச்சந்தாங்கல் கிராமத்தில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் 05.09.2022 அன்று அரசு நெல் கொள் முதல் நிலையத்தினை திறந்து வைத்து 10 விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் உதவிகள் மற்றும் 10 விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அக்டோபர் 2022 மாதம் முதல் தொடங்க வேண்டிய மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் பணியினை தமிழ்நாட்டில் மட்டும் முன்கூட்டியே தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி 27010 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டியும், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டியும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார நெல் விலையுடன் சன்ன ரகத்திற்கு கூடுதலாக ரூபாய் 100/- குவின்டால் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூபாய்.2160 எனவும் மற்ற ரகத்திற்கு ரூபாய் 75/- குவின்டால் ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூபாய்.2115 எனவும் நெல் கொள்முதல் விலை அறிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், விச்சந்தாங்கல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்து நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஐந்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஐந்து விவசாயிகளுக்கு மரச்செக்கு அமைப்பதற்கு மானியத்துடன் கடனுதவி அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேருர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர்கள் திருமதி.மலர்க்கொடிகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் திருமதி. ஜே.சத்தியவதி தேவி, உதவி மேலாளர் திரு.அரிகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.


No comments
Thank you for your comments