Breaking News

அரசு துவக்க பள்ளியில் உணவு தரத்தை ஆய்வு செய்தார் ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதுப்பாளையம் அரசு துவக்க பள்ளியில் விரைவில் துவங்க உள்ள காலை சிற்றுண்டி வழங்கல் தயாரிப்பு உணவு கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு,  உணவு தரத்தை ஆய்வு செய்தார்.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், மாண்புமிகு தம்ழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக  05.09.2022 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 20 பள்ளிகளில் 1,600 மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க காஞ்சிபுரம் புதுப்பாளையத் தெருவில் உள்ள துவக்கப்பள்ளி வளாகத்தில் உணவு தயாரிப்புக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

பரிச்சய முறையில்  உணவு தயாரிக்கப்பட்டு 20 துவக்க பள்ளிகளுக்கு காலை எட்டு முப்பது மணி அளவில் இரண்டு வாகனங்கள் மூலம் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு மாணவர்கள் உணவருந்தினர். இந்த உணவு தயாரிப்பு கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 

உணவு கூடத்தில் சமையல் எரிவாயு அறை பகுதி , உணவு கூடம் , பொருட்கள் பாதுகாப்பு அறை , குடிநீர் இயந்திரம் ,  மற்றும் உணவு பாத்திரம் சுத்தம் செய்யும் அறை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். அதன்பின்  தயாரித்து வழங்கப்பட்ட காலை உணவு மாதிரிகளை சுவைத்து,  இதேபோன்று சுகாதாரமான உணவுகளையும்,  இருப்பிடங்களை  அமைத்து  மாணவர்களுக்கு குறித்த நேரத்தில்  உணவு வழங்க வேண்டும் என  அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி பொறியாளர் உள்ளிடோர் இவ்வாய்வில் கலந்துக்கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments