Breaking News

வைரல் வீடியோ... போலிஸார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரத்தில் தொழில்போட்டி காரணமாக குடிபோதையில் எம்.ஐ மொபைல் ஷோரூமின் சிசிடிவி காமிராவை உடைத்தும், சீரியல் மற்றும் போக்கஸ் லைட்டையை சேதப்படுத்திய பிரபல மொபைல் கடை உரிமையாளர்.  தற்போது  இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  பரபரப்பு, சிவ காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை  செய்துவருகின்றனர்.


காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் தெரு பகுதியைச் சேர்ந்த சிவராம கிருஷ்ணன் என்பவர் காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில் எம்.ஐ.மொபைல் ஷோரூம் கடை ஒன்றினை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் வழக்கம் போல் கடந்த 7ம் தேதியன்று கடையில் விற்பனையை முடித்துக்கொண்டு கடை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

அதன் பின் மறு நாள் காலை வழக்கம் போல் கடையினை திறக்க அவர் வந்தப்போது அவரது கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி காமிராக்களை யாரோ மர்ம நபர்கள் உடைத்து எடுத்துச்சென்றதும், கடையின் சீரியல் மற்றும் போக்கஸ் லைட்டையை சேதப்படுத்தியதி இருந்ததும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பிறகு கடையை திறந்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை அவர் ஆய்வு செய்தப்போது கடந்த 7ம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் காரில் வந்த இருவரில் ஒருவர்  காரில் இருந்து கீழே இறங்கி குடிப்போதையில் கடையின் சிசிடிவி காமிராக்களை சேதப்படுத்தி உடைத்து எடுத்து சென்றதும், கடையின் சீரியல் மற்றும் போக்கஸ் லைட்டையை சேதப்படுத்தி இருந்ததும், அவர் நல்ல குடிபோதையில் தள்ளாடிக்கொண்டும் நிலைதடுமாறி கீழே விழுந்து, எழுந்ததும் உடன் வந்த ஒருவர் குடிப்போதையில் இருந்தவரை தாங்கி பிடித்துக்கொண்டும் பின்னர்  இருவரும் காரில் ஏறி சென்றதும்  பதிவாகி இருந்ததுள்ளது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை ஆதரமாக கொண்டு இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிவராம கிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். 

அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது ராஜா மற்றும் வேலு என்பதும்,இதில் ராஜா என்பவர்  காஞ்சிபுரத்தில்  இயங்கும் பிரபல மொபைல் ஷோரூமான C Zone மொபைல் ஷோரூமின் உரிமையாளர்  என்பதும், அவர்  தொழில்போட்டி காரணமாக இச் செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

No comments

Thank you for your comments