மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (Disha)
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (Disha) மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் இன்று (23.08.2022) நடைபெற்றது.
இக்கண்காணிப்பு குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதார துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், பிற துறைகளில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பாரத மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாடு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய நுண்ணீர் பாசன திட்டம், தேசிய வேளாண்மை சந்தை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப்பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சிகள் குறித்தும், பொது சேவை மையங்களின் பயன்பாடு குறித்தும், நெடுஞ்சாலை நீர் வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் சுகம்யா பாரத் அபியான் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்ட செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை மற்றும் வரவிருக்கும் மழை காலத்தில் மழை நீர் வடிவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தபட்டு வரும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்து, அதனை துரிதபடுத்தி பெரும்மழை வரும்முன் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,39,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கபட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திருமதி.ஸ்ரீதேவி, ஒன்றியக் குழு தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments