காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 30 (ii) காவல் சட்டம் அமல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது.
இச்சமயங்களில் இருபிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எம்.சுதாகர் , 30 (ii) காவல் சட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமல்படுத்த உத்தரவிட்டதின்பேரில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24.08.2022 அன்று முதல் 15 நாட்களுக்கு 30 ( ii ) காவல் சட்டத்தினை அமல்படுத்தியிள்ளனர்.
இதன்படி ஒரு கூட்டத்தைக் கூட்டவோ, பேரணி நடத்தவோ, அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிளோ மற்றும் மேற்கண்ட கூட்டத்தை கூட்ட ஊக்குவிப்பவர்கள் காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெறவேண்டும் என காவல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments
Thank you for your comments