Pharmacist பணியிடத்திற்கு நேரடி தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வழியாக Pharmacist பணியிடத்திற்கு நேரடி தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி Diploma in Pharmacy அல்லது Bachelor of Pharmacy அல்லது Pharm.D முடித்திருக்க வேண்டும். கட்டாயமாக Tamil Nadu Pharmacy Council -ல் பதிவு செய்து அப்பதிவினை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்திருக்க வேண்டும்.
Pharmacist பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு 5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கான வயது உச்ச வரம்பு SC, ST, MBC & BC இன பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு 59 வயதும், OC பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு 50 வயதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் www.mrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். 30.08.2022-க்குள் விண்ணப்பித்து அதன் விவரத்தினை முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறும் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
No comments
Thank you for your comments