மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு.
காஞ்சிபுரம் :
வாலாஜாபாத்தில் மின்மாற்றில் பணி செய்த போது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு. வாலாஜாபாத் போலீசார் விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். வாலாஜாபாத்தில் உள்ள துணை மின் நிலைய மின்சார வாரிய அலுவலகத்தில் ஒயர் மேனாக பணிபுரிந்து வருகிறார்.
கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்சுதந்திர போரில் தமிழர்களின் பங்கைபறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சிநிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்
இந்நிலையில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் அரசு மதுபான கடை அருகே உள்ள மின் கம்பத்தினை லாரி ஒன்று இடித்து விட்டு சென்ற காரணத்தால் மின்சாரம் தடைபட்டு உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மோகன்ராஜ் மற்றும் சக மின்வாரிய ஊழியர்கள் மின் தடையை சரி செய்யும் பணிக்கு சென்றுள்ளனர்.
நான் சர்வாதிகாரியை போல செயல்படுவேன்... கடமையை செய்ய தவறக் கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பழுதடைந்த மின்சார கம்பத்தை மாற்றும் பணி மின்வாரிய ஊழியர்கள் இருந்த பொழுது மின்மாற்றில் மின்தடம் மாற்றும் பணியை மோகன்ராஜ் மேற்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின்மாற்றிலேயே மோகன்ராஜ் துடித்து பரிதாபமாக பலியானார்.
நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை..! முதல்வர் மு.க.ஸ்டாலின்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் மற்றும் வாலாஜாபாத் போலீசார் மின்மாற்றில் சிக்கி உயிரிழந்த மோகன்ராஜ் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆளுநர்- நடிகர் ரஜினி அரசியல் சந்திப்புபிற்போக்குத்தனமா ஏன் யோசிக்கணும்?கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன பிரச்சனை?பாஜக அண்ணாமலை ஆவேசம்
மேலும் இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்வாரிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மோகன்ராஜ்க்கு காஞ்சனா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
பணியின் போதே மின்சாரம் தாக்கி சக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வாலாஜாபாத் மின் வாரிய ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments
Thank you for your comments