மாநகராட்சி பகுதிகளில் கட்டுமானத்திற்கு தேவையான லாரிகளை அனுமதிக்க கோரி மனு
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் 12 மணி முதல் 3 மணி வரையும் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரையும் கட்டுமானத்திற்கு தேவையான லாரிகளை அனுமதிக்க வேண்டும் என தமிழக அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை போக்குவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்சுதந்திர போரில் தமிழர்களின் பங்கைபறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சிநிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்
அந்த வகையில் தொழிற்சாலை பேருந்துகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் மாநகரக்குள் இரவு 11மணி முதல் காலை 5மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.இதனால் தொழிற்சாலை ஊழியர்களும்,கனரக வாகன ஓட்டிகளும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகரின் வழியாக கனிம பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தீனன் கூறுகையில் காஞ்சி மாநகர சுற்றுவட்டார மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களை சார்ந்த நாங்கள் எங்களின் லாரிகளை காஞ்சி மாநகருக்குள் கட்டுமான பொருட்களை ஏற்றிவரும் லாரிகளை கடந்த பத்து நாட்களாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது .
ஆளுநர்- நடிகர் ரஜினி அரசியல் சந்திப்புபிற்போக்குத்தனமா ஏன் யோசிக்கணும்?கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன பிரச்சனை?பாஜக அண்ணாமலை ஆவேசம்
கனிமப்பொருட்களுக்கு AD Mines முலம் வழங்கப்படும் இரசீது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.இதனால் கனிமப் பொருட்கள் வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்து விடுகின்ற நிலையில் இதனை காரணம் காட்டி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் சூழல் உள்ளது மேலும் இரவு நேரங்களில் நகரவிதிகளில் கட்டுமான போக்கை எடுத்துச் செல்லும்போது டெலிவரி செய்யும் நேரங்களில் குறுகிய வீதிகளில் பொதுமக்கள் தங்களுடைய கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு உறங்கி விடுவதால் இரவு நேரங்களில் மக்களை தொந்தரவு செய்து எங்கள் லாரிகளில் உள்ள கனிமங்களை விநியோகம் செய்யும் நிலை உள்ளது.
ஆகையால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரையும் கட்டுமானத்திற்கு தேவையான லாரிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கிவரும் லாரி உரிமையாளர்கள் இணைந்து காஞ்சிபுரம் மாநகருக்குட்பட்ட பபகுதிகளில் கனிம பொருட்களான மணல்,ஜல்லி போன்ற எந்தவித பொருட்களும் விநியோகம் செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments