Breaking News

ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும... ஆட்சியர் கடுமையான எச்சரிக்கை

காஞ்சிபுரம் ஆக 13-

அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்தவேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் தேசியக்கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15-ம் தேதி 75-வது சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும். மேலும், அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்தவேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் தேசியக்கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களின் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.


நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை..!  முதல்வர் மு.க.ஸ்டாலின்

கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக எண் –    044-27237175 மற்றும் 7402606005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் அளிக்குமாறு மாவட்ட கலெக்டர்.ஆர்த்தி,  தெரிவித்துள்ளார்

ஆளுநர்- நடிகர்  ரஜினி  அரசியல் சந்திப்பு
பிற்போக்குத்தனமா ஏன் யோசிக்கணும்?
 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன பிரச்சனை? 
பாஜக அண்ணாமலை ஆவேசம்


No comments

Thank you for your comments