Breaking News

குருஜி குரு ராஜாவின் ஜோதிட மாநாடு

சேலம், ஆக.1-

குருஜி ஆன்மீக அறக்கட்டளை திரு அண்ணாமலையார் ஜோதிட ஆலயம் வழங்கும் குருஜி குரு ராஜாவின் ஜோதிட மாநாடு 31-7-2022 ஞாயிற்றுக்கிழமை சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோட்டில் அமைந்துள்ள ரோட்டரி சேலம் சன்ஸ்டார் ஷேரிட்டபுள் டிரஸ் ஏசி ஹாலில் பிரம்ம ஞானியர் சதீஷ்குமார் ஹோமம் அமைத்து 31-07-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8-00 மணியளவில் தொடங்கி மாலை 5-00 மணி வரை நடைபெற்றது. 

குருஜி குருராஜா  தலைமையேற்று ஓம் செல்வராஜ் முன்னிலை வகித்தும், டாக்டர் கண்கீதா பொருளாளர் அவர்கள் வரவேற்று  இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள்இராமதாஸ் எம்எல்ஏ, வழக்கறிஞர் பூமொழி, மாநிலத்தலைவர் (தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி) சி.பெ.சத்ரியசேகர்  பசுமைத்தாயகம், மாநில இணை பொது செயலாளர் அவர்கள், இதன்  சிறப்பு விருந்தினர்களாக வாக்குயோகி பொதுஉடை மூர்த்தி, ஏஎல்பி அஸ்ட்ராலஜி, ஜோதிட பேராசிரியர் ஜெயன் ராஜா ராம்ன், ஜெயின் ஜோதிஷ் பத்ததி, ஜோதிட ஆசிரியர் அருள் பிரகாசம் ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியினையடுத்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் என்கிற ஆணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்தற்கு வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நல வாரியம் அமைத்திட வேண்டும் மூன்று நலிவடைந்த ஏழை எளிய ஜோதிடர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ஜோதிடர்களுக்கு நலவாரியம் மற்றும் சேமநல நிதிவழங்கவும், இலவச வீடுகள் வழங்கிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இறுதியாக நிர்வாக குழு உறுப்பினர் அன்புச்செழியன் நன்றி உரையாற்றினார்.


பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக
 செஸ் ஒலிம்பியாட் போட்டி   துவக்க விழா - முழு தொகுப்பு

No comments

Thank you for your comments