Breaking News

சேலத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம்

சேலம், ஆக.1-

விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு 3 வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளின்  போராட்டத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெற்றது. அதனை தொடர்ந்து பிரதமர் ஆதார விலை குறித்தும் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

பெயரளவில் பாஜக கட்சியினரை மட்டும் வைத்து அந்த குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த குழுவை ஐக்கிய விவசாயிகள் சங்கம் நிராகரித்தது. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மீண்டும் மோடி அரசு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதை கண்டித்தும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் சங்க செயலாளர் என். கே. செல்வராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அன்பழகன், மோகன் ஏ ஐ கே எம் சார்பில் வி.ஐயந்துரை, ஏ ஐ கே கே எம் எஸ்  ஆர்.நடராஜன், ஏ ஐ கே எஸ்  எம். சின்னதம்பி ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கரயா உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments