சென்னையில் 250 ஏரிகளை அழித்து வளர்ச்சி பணிகளை கொண்டு வந்துள்ளனர் - அன்புமணிராமதாஸ் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. கருத்து கேட்ப்பு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்பி கலந்து கொண்டு கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்கிறார்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
கருத்து கேட்ப்பு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணராமதாஸ் எம்பி கலந்து கொண்டு கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்கிறார்.
கருத்து கேட்ப்பு கூட்டத்தில் பரந்தூர், வளத்தூர், மேல் பொடவூர்,தண்டலம்,மடப்புரம், நெல்வாய், ஏகனாபுரம், இடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு, குழு கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்,
பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைய எந்த அடிப்படையில் இந்த இடம் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை தமிழக அரசு அறிவிப்பு மட்டுமே உள்ளது.
விவசாயத்தையும், நீர்நிலகளையும் அழித்து வளர்ச்சி பணிகளான விமான நிலையம் கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாது
வளர்ச்சி அவசியமானது வளர்ச்சி நமக்கு தேவை, ஆனால் விவசாயத்தை நீர்நிலைகளை அழித்து வரும் வளர்ச்சியை தான் நாங்கள் எதிர்க்கிறோம் எடுத்துக்காட்டாக 8 வழி சாலை என்.எல்.சி வளர்ச்சி திட்டம் இல்லை அழிக்கும் திட்டம்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறியதாவது,
7 பேர் கொண்ட குழு தமிழகத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு ஏன் பரந்தூர் இடத்தை தேர்வு செய்தார்கள் என பல கேள்விகள் உள்ளன அனைத்திற்கும் குழு அளிக்கும் அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை தெரிவிக்கப்படும்.
சென்னையில் 250 ஏரிகளை அழித்து வளர்ச்சி பணிகளை கொண்டு வந்துள்ளனர் என அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் கவுரவ தலைவர் ஜிகே மணி ,வழக்கறிஞர் பாலு முன்னாள் நடுவன் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஏ கே மூர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள்.
மாநில இளைஞரணி செயலாளர் பொன் கங்காதரன் ,மாவட்டத் தலைவர் உமாபதி உள்ளிட்ட கிராம மக்கள் ஏறால் மனோகர் கலந்து கிராம மக்கள் யாரால் மனோகர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments