டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக சமீர் வி.காமத் நியமனம்
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ.) தலைவராக சமீர் வி.காமத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் (டி.ஆர்.டி.ஓ.) தலைவராகவும் சதீஷ் ரெட்டி பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், அவரை மத்திய அரசு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் டி.ஆர்.டி.ஓ.வின் தலைவராகவும் சமீர் வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார்.
விஞ்ஞானியான காமத் 1985-ம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியல் படிப்பில் பி.டெக் படித்துள்ளார். பின், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவர் 1989-ல் டி.ஆர்.டி.வில் விஞ்ஞானியாக இணைந்தார்.
அதன் பின், அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறியவர் 2017 ஆம் ஆண்டு நேவல் சிஸ்டம்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் இயக்குநராக பொறுப்பேற்றார். தற்போது, டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
No comments
Thank you for your comments