தொண்டியில் மாநில அளவில் இறகுபந்து போட்டி - நிர்வாகி சாதிக் பாட்சா தலைமை
ராமநாதபுரம் :
தொண்டியில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ராலி ஸ்போர்ட்ஸ் இறகுப்பந்து உள்ளரங்கு மைதானத்தில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சாதிக் பாட்ஷா தலைமையில் மாநில அளவில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. குணா, பைசல் ,யாசிர் இர்ஷாத்.பாலா ஆசிப் குதுப் ஜிப்ரிக் அபுல் பயாஸ் ஹிதாயத்துல்லாஹ் காமராஜ் சேகர் பெரிய சாமி ராஜ் சதிஸ் கல்யான் சக்தி ஆனந்த் தீபக் அகமது யாசின் மூசா செல்வகுமார் செல்வா இஸ்ஸதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொண்டி காவல்துறை ஆய்வாளர் முருகேசன் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் கௌரவ தலைவர்கள் பொறியாளர் அபூபக்கர் இஸ்லாமிக் பள்ளி தாளாளர் மற்றும் அமீர் சுல்தான் பள்ளி தாளாளர் அப்துல் ரவூப், நம்புதாளை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் , திருவாடனை ஒன்றிய கவுன்சிலர் நம்புதாளை முத்துராக்கு , ராலி ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகள் ரஹ்மத்துல்லாஹ், ஹிப்பத்துல்லாஹ் நூருல்லாஹ் போட்டிகளை தொடங்கி வைத்தனர். 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றன.
காரைக்கால் நாகர்கோயில் கோவை தஞ்சாவூர் மன்னார்குடி காரைக்குடி மதுரை திருச்சி தொண்டி ராமநாதபுரம் பரமக்குடி ஆர் எஸ் மங்கலம் திருவாடனை ராமேஸ்வரம் முதுகுளத்தூர் சாயல்குடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று விளையாடினர்.
இதில் மாநில அளவிலான ஓபன் போட்டியில் தஞ்சாவூர் லோகேஷ் சூர்யா அணி முதல் பரிசு பத்தாயிரம் மற்றும் சில்வர் கோப்பை பெற்றனர். இரண்டாம் பரிசு காரைக்குடி வீரபாண்டியன் மணிகண்டன் 7000 ரொக்க பரிசும் சுழற் கோப்பையும் வென்றனர்.
மூன்றாம் இடம் செந்தில் சேகர் காரைக்கால், நான்காம் இடம் தர்மா குரு கம்பம் ஆகிய அணியினர் பெற்றனர் மாவட்ட அளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பரமக்குடி சசிகுமார் சங்கர் முதல்பரிசும் சுழர்கோப்பையும் வென்றனர்.
இரண்டாம் பரிசு தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சாதிக் பாட்சா குதுப் தீ ன் சுழற் கோப்பை வென்றனர். மூன்றாம் பரிசு ஆர்எஸ் மங்கலம் ஆனந்தா லாரன்ஸ் மற்றும் ராமநாதபுரம் கணேஷ் மகேந்திரன் ஆகியோர் பெற்றனர். மாவட்ட அளவில் ஓபன் பிரிவில் தவனேஷ் சூர்யா முதல் பரிசு சுழற் கோப்பை பெற்றனர். அலெக்ஸ் முத்துக்குமார் இரண்டாம் பரிசு பெற்றனர்.
தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் யாசின் தீபக் ராலி ஸ்போர்ட்ஸ் கல்யாண் கந்தவேல் ஆகியோர் பெற்றனர். இதர்கான பரிசுகளை. தொண்டி இந்து தர்ம பரிபாலன் சபை தலைவர் எல் ஆர் சி ராஜசேகர் நியூ மேக்ஸ் பாண்டி தொண்டி திமுக பேரூர் செயலாளர் இஸ்மத்நானா முத்து ராக்கு ,ஆறுமுகம் தொழிலதிபர் பவுசியா சாகுல் ஹமீது வழக்கறிஞர் ஜிப்ரி ப்ரோஸ் கான் கே ஆர் எஸ் ஜுவல்லரி காத்தராஜா ஏழாவது வார்டு பேரூர் கவுன்சிலர் , ஐந்தாவது வார்டு கவுன்சிலர் தொண்டீஸ்வரன் 12 வது வார்டு கவுன்சிலர் பார்த்திபன் அபுதாஹிர் ஹாரிஸ் கரீம்
ரவி ராம் ஜுவல்லரி ரவி திருமலை வள்ளளார் பிகேபி காளிதாஸ் பிகேபி செல்வம் ஹோண்டா குமார் வேளாணி குமார் ட்ரீம் ஹோம் இ ஆர் ஏ கலிபுல்லாஹ் ஜெகன் கண்ணன் ஜிப்ரா கிளாத்திக் சந்தனராஜ் சிவப்பிரியா டாக்ர் ஜெயராஜ் பைசல் சேக் பரித் எஸ் கே எஸ் செல்லக்கனி ஆகியோர் மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை சுழற் கோப்பையும் வழங்கினர்.
தொண்டி ராலி ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ரமிஸ் அவர்களுக்கு தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர். நிகழ்வின் முடிவில் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி குணா நன்றி கூறினார்..
.png)

No comments
Thank you for your comments