Breaking News

ராமநாதபுரம் எக்ககுடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரச்சார பொதுகூட்டம்- மாவட்ட தலைவர் ஆரிப்கான் தலைமை

 ராமநாதபுரம், ஆக.28-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் எக்ககுடி கிளை சார்பில் மாபெரும் பித்அத் ஒழிப்பு மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.


பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆரிப்கான் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கரீம்ஹக்சாகிப், மாவட்டத் துணைச் செயலாளர்கள் இப்ராஹிம் சபிர், யாசர் அராபத், மன்சூர் ரஜபுதீன், மற்றும் எக்ககுடி கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் நமது இலக்கு என்ற தலைப்பில் பேசினார். 

சென்னையில் 250 ஏரிகளை அழித்து 
வளர்ச்சி பணிகளை கொண்டு வந்துள்ளனர்
 அன்புமணிராமதாஸ் குற்றச்சாட்டு


பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பித்அத் மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பில் இஸ்லாமியர்களிடம் உள்ள மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் இஸ்லாத்திற்கு முரணான காரியங்களில் மூழ்கி உள்ளவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.

பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். எக்ககுடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது இன்று வரை முழுமையாக பலதுறைகளில் கொடுக்கப்படவில்லை. 


இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைச் செயலாளர் உஸ்மான் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments