காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
காஞ்சிபுரம், ஆக.16 :
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் வரவுசெலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தி இருந்தார்.
அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் ஒன்றியம் கருப்படித்தட்டடை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பொன்னா வெங்கடேசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்றநிலை, ஒன்றிய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, நீர் வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சிகளுக்கான கட்டணங்களை இணைய வழிசெலுத்துதல், பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்
இதில் துணை தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கால்நடைத்துறை அலுவலர் சவிதா கலந்துகொண்டார். அப்போது, கிராம ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை, தெருவிளக்குகளை முறையாக பராமரித்தல், சாலை செப்பனிடும் பணி முறையாக நிறைவேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பூங்கொடி, கலைவாணி, காஞ்சி நித்யா, லோகநாதன், ஜெயந்தி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் கோபி நன்றி கூறினார்.


No comments
Thank you for your comments