மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு
காஞ்சிபுரம், ஆக.16-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டுமென பெருந்திரள் முறையீடு (ஆக.16) செவ்வாயன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், வீடுகள், விவசாயம், சிறு தொழில் மற்றும் கை நெசவு தொழிலாளர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை தொடர்ந்து வழங்கிடு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் கட்டண உயர்வினை ஆட்சி அமைத்து மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுடன் ஒலிமுகமது பேட்டையிலிருந்து ஊர்வலமாக சென்று காஞ்சிபுரம் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு மாநில குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ், டி.ஸ்ரீதர், ஆர்.சௌந்தரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ப.வடிவேலன், வி.சிவப்பிரகாசம், எஸ்.சீனிவாசன், ஜி.வசந்தா, இ.விநாயகமூர்த்தி, பி.தேவி, எஸ்.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் கூறியதாவது, தமிழ்நாடு அரசு வரும் செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வினை 12 சதவீத முதல் 52 சதவீதம் வரை உயர்த்தி முன்மொழிந்துள்ளது. பொது மக்களிடம் கருத்து கேட்பு கோரியுள்ளது. அதேசமயம் முன்மொழிவு மின் இணைப்பு கட்டணம் ஆய்வு, பழுதடைந்த மீட்டர் மாற்றம், வைப்பு தொகை என இணைப்பு தொடர்பான அனைத்து பணிகளுக்கும் இரண்டு மடங்காக உயர்த்தி முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அதிகபட்சமாக ஆறு சதவீதம் உயர்வுக்கு 2026-2027 நிதியாண்டு வரை முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரானா பெருந்துற்று முடக்கம் காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டு விட்டன. அந்த பெருந்தொற்றுக்குப் பின் சற்று மூச்சு விடக்கூடிய சூழலில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் விலைகளும் உயர்ந்துள்ளது. பண வீக்கம் விகிதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த மின் கட்டண உயர்வு மக்களை பெருமளவில் பாதிக்கும்.
பருவநிலை மாற்றத்தில் மின்சார மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகி விட்ட நிலையில் மக்கள் நல அரசு இந்த மின் கட்டண உயர்வை கைவிடுவதோடு ஆண்டுதோறும் ஆறு சதவீதம் உயர்வு முன் மொழிவினையும் பரிசு சிலிணை செய்ய வேண்டும் என கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்


No comments
Thank you for your comments