தேவாலயங்களை சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 இலட்சமும், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 இலட்சமும் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 இலட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள்
1. கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2. தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை-III) அளிக்க வேண்டும்.
3. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை-II & III உள்ளவாறு பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட ஆட்சிதலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவினரால் அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவரால் பரிந்துரை செய்யப்படும்.
நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாகசெஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா - முழு தொகுப்பு
.jpg)
No comments
Thank you for your comments