கல்லீரல், மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற கருத்தில் கேஎம்சிஹெச் சார்பில் வாக்கத்தான் பேரணி
கோவை:
கோவையில் உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு கல்லீரல் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக "ஆரோக்கியமான கல்லீரல், மகிழ்ச்சியான வாழ்க்கை" என்ற கருத்தில் கேஎம்சிஹெச் சார்பில் வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.
ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.பள்ளியில் துவங்கிய இந்த பேரணி கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி முன்னிலையில், கோவை நகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணல் ஐபிஎஸ் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லீரல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மற்றும் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற்றுவருவோர் சுமார் 200 பேர், மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள், அடங்கிய கேஎம்சிஹெச் கல்லீரல் அறுவை சிகிச்சை குழுவினர், மாணவர்கள், கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மூலம் கல்லீரல் நோய் ஏற்படக்கூடிய அபாய காரணிகள், நோய் வராமல் தற்காத்துக் கொள்வது, குறித்த காலத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது.
கல்லீரல் வீக்கம், ஹெபடைடிஸ் வைரஸ் காய்ச்சல், மதுப்பழக்கம் ஆகியவையே, அதிகரித்துவரும் கல்லீரல் நோய்களுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
கல்லீரல் நோய்க்கு ஆரம்ப நிலையில் அறிகுறிகள் எதுவும் தெரியாது . மஞ்சள் காமாலை, கால்வீக்கம், அடிவயிறு வீக்கம், இரத்தவாந்தி எடுத்தல், நினைவிழத்தல் ,முதலானவை கல்லீரல் செயல் இழப்பைக் குறிக்கும், அறிகுறிகள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


No comments
Thank you for your comments