Breaking News

காஞ்சிபுரம் ஆதி காமாக்ஷி ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் ஆடி பூரத்தை ஒட்டி ஊஞ்சல் சேவை.

 காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஆதி காமாக்ஷி ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் ஆடி பூரத்தை ஒட்டி ஊஞ்சல் சேவை. மேலும் லட்சம் தீபம் விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.


பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள,  ஸ்ரீ ஆதி காமாட்சி கோவில் என அழைக்கப்படும், ஸ்ரீ ஆதி காமாட்சி, ஆதிபீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் திருக்கோவிலில் ஆடி மாதம் ஆடி பூரத்தை ஒட்டி லட்ச தீபம் நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லட்ச தீப நிகழ்ச்சியில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

லட்ச தீபத்தை ஒட்டி ஆதி பீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, லட்சுமி,சரஸ்வதி, தேவிகளுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்து கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து  பின் திருக்கோவில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.  


சிறப்பு அலங்காரத்தில் எழுதருளில் ஆதி காமாட்சி அம்மன்  ஊஞ்சல் சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



No comments

Thank you for your comments