Breaking News

வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 01.08.2022 முதல் தொடங்கி செயல்படுத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. 


காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும், அல்லது voter helpline என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLOs) கொண்டுவரும் படிவம் 6B-னை பூர்த்தி செய்து கொடுத்தும் அல்லது தங்கள் பகுதிக்குட்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் (AEROs) மூலமாகவும், அல்லது வாக்காளர் உதவிமையம், இ-சேவை மையம், மக்கள் சேவை மையம் மூலமாகவும் அல்லது சிறப்பு முகாம் நாட்களில் அலுவலர்களை அணுகியும் ஆதார் எண்ணை சமர்ப்பித்து அதனை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.  


15.08.2022 முதல் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் இ சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இ சான்றிதழ் பெற வெற்றிகரமாக ஆதார் எண்ணை இணைத்த பின்பு வரும் குறியீட்டு எண்ணினை குறித்துக் கொண்டு https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தில் சென்று வாக்காளரின் மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.



பின்னர் வரும் OTP எண்ணையும் உள்ளீடு செய்தால் வரும் அட்டவணையில் வாக்காளர் பெயர், அடையாள அட்டை எண் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட படிவம் 6B-ன் குறியீட்டு எண்ணையும் உள்ளீடு செய்து சான்றிதழை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

 செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments