நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பட்டுநூல் மணி மாலை கோர்தல் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தொழில் முனைவோர்களுக்கு மணிமாலை கோர்த்தல் பட்டு நூல் கொண்டு தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளித்து உற்பத்தி செய்து அவர்களது வாழ்வாதாரம் உயர மகளிர் திட்டம் மூலம் சிறிய தொழில்கூடம் அமைக்க ரூ. 2.50 லட்சம் ஆதார நிதி மற்றும் அணிகலன்கள் பட்டு நூல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 560 நரிக்குறவர் குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழிற்கூடம் ரூ.2.56 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இக்கூடத்தில் பயிற்சி அளிக்க இயந்திரங்கள் பொருத்தப்படும். இந்த நல்ல வாய்ப்பை மகளிர் சுய உதவிக்குழுக்கள் நன்கு பயன்படுத்தி மென்மேலும் முன்னேற்றம் அடைந்து நம் மாவட்டத்தை முன் மாநில மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழு தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் திருமதி. அம்பிகாபதி, மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு.வெங்கடேசன், நபார்டு வங்கி மேலாளர் திரு.விஜய நிகர், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments