Breaking News

கஞ்சா போதை இளைஞர்களின் அட்டகாசம்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு

 காஞ்சிபுரம் அருகே நள்ளிரவில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை கஞ்சா போதை இளைஞர்கள் கற்களால் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள அருள் நகர் ராமானுஜர் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வைத்து ட்ரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். நேற்று  சாகுல் ஹமீத் தனது காரில் சென்னைக்கு வேலைக்காக சென்று இரவு வீடு திரும்பினார். வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் முன்னே தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். 

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

திடீரென்று அதிகாலையில் 3 மணியளவில் அக்கம் பக்கத்தினர் சாகுல் ஹமீதை தொடர்பு கொண்டு தங்களது  கார் கண்ணாடிகள்  முற்றிலுமாக உடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததை அடுத்து  உடனடியாக அவர் எழுந்து வந்து பார்த்தப்போது அவரது கார்  கண்ணாடி முற்றிலுமாக கல்லால் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 



அதனையடுத்து சாகுல் ஹமீத் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியை ஆராய்ந்தப் போது நள்ளிரவு 1 மணி அளவில் சட்டை இல்லாமல் கஞ்சா போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் பெரிய கற்களால் கார் கண்ணாடியை முற்றிலுமாக உடைத்தது அதில்  பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியை அடிப்படையாக கொண்டு கஞ்சா போதை இளைஞர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

நான் சர்வாதிகாரியை போல செயல்படுவேன்... கடமையை செய்ய தவறக் கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை  - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கஞ்சா போதையில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகம் நடைபெற்று வரும் நிலையில் இரவு நேரத்தில் இது போல் கஞ்சா போதையில் உலா வரும் போதை இளைஞர்கள், ஆசாமிகளை  இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை..!  முதல்வர் மு.க.ஸ்டாலின்


No comments

Thank you for your comments