Breaking News

75வது சுதந்திர தின கொண்டாட்ட மாபெரும் பேரணியில் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

 காஞ்சிபுரம்  :

75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்  வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின கொண்டாட்ட மாபெரும் பேரணியில் 1500க்கும் மேற்பட்டோர்  இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு சென்றனர்.


75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்  வகையிலும்,அதனை நினைவு கூறும் வகையிலும்  நாட்டிலுள்ள  அனைத்து குடிமகன்களும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நான் சர்வாதிகாரியை போல செயல்படுவேன்... கடமையை செய்ய தவறக் கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை  - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக 75வது சுதந்திர தின கொண்டாட்ட மாபெரும் பேரணியானது இன்று காஞ்சிபுரத்தில்  சிறப்பாக நடைபெற்றது.

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

அதையொட்டி பாஜகவினர், தனியார் கல்லூரி மாணவ மாணவியர்கள்,பொது மக்கள் என  சுமார் 1500க்கும் மேற்பட்டோர்  இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு பாஜக மாநில செயலாளர் வினோத் பா.செல்வம் தலைமையில் காஞ்சிபுரம் காமராஜர் சாலையிலிருந்து பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக  ரயில்வே சாலை வரை சென்று அம்பேத்கர் சிலை முன்பு பேரணி முடிவுற்றது.

காத்தாடி வாழ்க்கை - குறும்படம்


பேரணியின் போது வழியெங்கும் பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே என முழுக்கங்களும் எழுப்பப்பட்டது.

நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை..!  முதல்வர் மு.க.ஸ்டாலின்

No comments

Thank you for your comments