வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டம் தொடக்கம்...
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு இணை மானிய திட்டம் குறித்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்சுதந்திர போரில் தமிழர்களின் பங்கைபறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சிநிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்
இணை மானிய திட்ட தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டினை வெளியிட்டு பேசியதாவது:
தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைக்கு வழிவகுத்தல் மற்றும் நிலையான வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நான் சர்வாதிகாரியை போல செயல்படுவேன்... கடமையை செய்ய தவறக் கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
இத்திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் குழு தொழில்களுக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக 40 இலட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் இணை மானிய திட்டம் என்ற செயல்பாடு செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் தொழில் புரிய ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் வாழிவாதார சேவை மையம் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனை வழங்குதல், தொழில் திட்டம் மற்றும் முன்மொழிவு தயார் செய்திட உதவி செய்தல், தொழில் துவங்க தேவையான பதிவு சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பெற்று தருதல், மற்றும் மின்னணு பணபரிவர்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை..! முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணைமானிய திட்டத்தினை ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் வழங்கி ஊரக பகுதிகளில் தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆளுநர்- நடிகர் ரஜினி அரசியல் சந்திப்புபிற்போக்குத்தனமா ஏன் யோசிக்கணும்?கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன பிரச்சனை?பாஜக அண்ணாமலை ஆவேசம்
இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் திரு.தினகர் ராஜ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் திரு.கார்த்திகேயன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் திரு.செல்வராஜ் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments