Breaking News

ஆகஸ்ட் 15 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்படும்.



ஆகஸ்ட் 15 (சுதந்திரதினம்) அன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம சபைக் கூட்டங்களில் வரவுசெலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப்பொருள்கள் உள்ளன.

நான் சர்வாதிகாரியை போல செயல்படுவேன்... கடமையை செய்ய தவறக் கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை  - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்றநிலை, ஒன்றிய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், துய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, நீர் வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சிகளுக்கான கட்டணங்களை இணைய வழிசெலுத்துதல், பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை..!  முதல்வர் மு.க.ஸ்டாலின்

இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். 

கிராம சபைகளில் பொது மக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆளுநர்- நடிகர்  ரஜினி  அரசியல் சந்திப்பு
பிற்போக்குத்தனமா ஏன் யோசிக்கணும்?
 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன பிரச்சனை? 
பாஜக அண்ணாமலை ஆவேசம்

மேலும், கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திடவேண்டும். 

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் முலம் வரவுசெலவு கணக்கு (படிவம் 30-ன்சுருக்கம்) வைக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments