Breaking News

திடீரென தீப்பற்றி எரிந்த தென்னந் தோப்பு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டையில் திடீரென தீப்பற்றி எரிந்த தென்னந் தோப்பு  200 க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் தீயில் எரிந்து கருகி நாசம்  தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் துரை என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தென்னன் தோப்பு வைத்துள்ளார். இதில் பல நூற்றுக்கணக்கான தென்னை மரக்கன்றுகளை நட்டு  வைத்து பராமரித்து வருகிறார்.

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

இந்நிலையில் தென்னை மரக் கன்றுகள் நடவு செய்துள்ள தென்னன் தோப்பில்  அதிக அளவு புல் பூண்டு செடிகள் வளர்ந்திருந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென புல் பூண்டு செடிகளில் தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது.


இதனைக் கண்டு தோட்டத்தில் பணி செய்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் தீயை அணைக்க முயற்சித்த  நிலையில் தீ மளமளவென தென்னன் தோப்பு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டமும் எழுந்ததது.

நான் சர்வாதிகாரியை போல செயல்படுவேன்... கடமையை செய்ய தவறக் கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை  - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இதனையடுத்து இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் தென்னன் தோப்பு முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார்   இரண்டு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை..!  முதல்வர் மு.க.ஸ்டாலின்

தீயணைப்புத்துறையினர் சுமார் 2மணி நேரமாக போராடி தீயை அணைத்தப் போதிலும் தென்னன் தோப்பில் நடவு செய்யப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தென்னை மரகன்றுங்கள் தீயில் எரிந்து கருகி முற்றிலும் நாசமாகியது.




No comments

Thank you for your comments