Breaking News

அறங்காவலர் குழு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

காஞ்சிபுரத்தில் அறங்காவலர் குழு புதிய நிர்வாகிகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பதவி ஏற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் தமிழக குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பதவி ஏற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக தியாகராஜனும், உறுப்பினர்களாக வெங்கடேசன், செல்வி, சத்தியமூர்த்தி, கோதண்டராமன் ஆகியோரின் பதவி ஏற்பு விழா காமாட்சி அம்மன் கோவில் கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உறுதி மொழி கூறி பதவி ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்பு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் திமுகவினர்,உறவினர்கள் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.



No comments

Thank you for your comments