Breaking News

“நம்ம ஊரு சூப்பர்”- சிறப்பு முனைப்பு இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி  ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க எழில்மிகு கிராமங்களை உருவாக்கிட “நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு முனைப்பு இயக்கம் 20.08.2022 முதல் 01.10.2022 வரை நடைபெறுதலை முன்னிட்டு  20.08.2022 அன்று காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் துவக்கி வைக்கப்பட்டது அதில் இயக்கத்தினுடைய குறிக்கோள்கள்  விளக்கப்பட்டது.


மேலும் இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பெரும்புதூர், குன்றத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியங்களில் இன்று சிறப்பு இயக்கம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதல் நிகழ்வாக அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப.,அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும்  சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகள் பார்வையிடப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் “நம்ம ஊரு சூப்பரு”  விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, தூய்மை கிராம உறுதிமொழி  எடுக்கப்பட்டது.

செயல்பாடுகள்

1.பொது இடங்கள், பள்ளி மற்றும் பொது நிறுவனங்கள், பொது கழிப்பிடங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல் 20.08.2022 முதல் 02.09.2022 வரை

2 .பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, தன் சுத்தம் மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு 27.08.2022  முதல் 02.09.2022வரை

நடிகர் ஜெயம் ரவியின்..
மௌனம் கலைவோம்..குறும் படம்

3.அனைத்து வீடுகளிலும் குடிநீர் சுகாதாரம் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை குறித்து மகளிர் சுய உதவி (SHG) குழுக்கள் மூலம் விழிப்புணர்வு அளித்தல் 03.09.2022 முதல் 16.09.2022 வரை


4. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்கள் (Single Use Plastics) பற்றிய     விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 17.09.2022 முதல் 23.09.2022 வரை

5. பசுமையான மற்றும் தூய்மையான கிராமங்களை உருவாக்குதல்(Clean and Green Villages)  24.09.2022 முதல் 01.10.2022 வரை



6. கிராம  சபா தீர்மானங்கள் நிறைவேற்றுதல் (அக்டோபர் - 02)

     i)  ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி இல்லா கிராமம்

     ii)  பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு அபராதம் விதித்தல்

    iii)  குப்பைகளை வீடுகளில் தரம் பிரித்து கொடுத்தல்

  iv) “நம்ம ஊரு சூப்பரு” முனைப்பு இயக்கத்தின் செயல்பாடுகளில் நிலைத்து                                                   கடைபிடித்தல்,


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. ஸ்ரீதேவி, மகளிர் திட்ட அலுவலர் திரு.செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சீனிவாசன் மற்றும் திரு.வரதராஜன், ஒன்றியக் குழு துணைத்தலைவர் திருமதி. திவ்யபிரியா  வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருள்மொழி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.


No comments

Thank you for your comments