நடிகர் டாக்டர் தாமு பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழக அரசின் வழிகாட்டு தலின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மௌனம் கலைவோம்..குறும் படம்
அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 20.08.2022 அன்று காலை 09.00 மணியளவில் மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆடிடோரியத்தில் சிறப்பு பேச்சாளராக நடிகர் டாக்டர் திரு.தாமு அவர்கள் கலந்துக் கொண்டு சுமார் 55 பள்ளிகளை சேர்ந்த 900 மாணவ, மாணவிகளும், மீனாட்சி மருத்துவ கல்லூரியை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் மொத்தம் 1300 மாணவர்களிடையே இடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் போதை பொருளுக்கு எதிராக உறுதி மொழியும், போதை பெருளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விழிப்புணர்வு சம்மந்தமாக குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments