கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
வேலூர்:
வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருகிற 18ம் தேதி வரை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருகிற 18-ந்தேதி வரை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்கள் வழங்கப்ப டுகிறது. நடப்பாண்டு முதல் ஒரு ஆண்டுகால பயிற்சியாகவும், இரு பருவங்களாகவும் வகுப்புகள் நடைபெற உள்ளது.
பிளஸ்-2 தேர்ச்சி பெற்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை. இப்பயிற்சிக்கான மொத்த கட்டணத்தொகை ரூ.18850 ஆகும். பயிற்சிக்கான வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.
விண்ணப்பங்கள் வருகிற 18ம் தேதி மாலை 5.30 மணிவரை வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் மற்றும் நகலுடன் பதிவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் 22.08.2022 மாலை 5.30 மணிக்குள் முதல்வர், வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் 9-வது கிழக்கு குறுஞ்சாலை காந்தி நகர் - வேலூர் 632006 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
மேலும் கூடுதல் தகவலுக்கு தொலைபேசி எண் 0416-2242464 கைபேசி எண் 7845859784 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments