Breaking News

பகுஜன் சமாஜ் கட்சியின் சென்னை மண்டல இளைஞரணி மாநாடு

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த மதுரவாயில் தனியார் திருமண மண்டபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சென்னை மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக ஆகாஷ் ஆனந்த் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டார்.


இந்த நிகழ்ச்சியினை மாநில ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்தாஸ் தலைமையில் நடைபெற்றது இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என 5000த்திற்க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் கூறுகையில் தற்போது இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசும் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இதுவரை எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை...


விலைவாசிகள் மட்டுமே அதிகரித்து உள்ளது ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் உள்ள அனைத்து பொருள்களும் விலை ஏற்றத்தா பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின தற்போது உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்...

இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பகுதியின் சமாதி கட்சிக்கு வாக்களித்து நாம் மத்தியில் அமர்ந்தால் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து தரப்படும் இதனால் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கேட்டு க்கொள்கிறேன் இன்று தெரிவித்த ஆகாஷ் ஆனந்த் அவர்களுக்கு தொண்டர்கள் கைகளை தட்டினர்

No comments

Thank you for your comments