குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு...
- காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு..
- கஞ்சா சோதனையில் வெளிச்சத்திற்கு வந்த விஷமிகள் பிளான்...
- 4நாட்டு வெடிகுண்டுகள் கைபற்றி,1கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒருவரை பிடித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை..
தமிழகத்தில் அண்மை நாட்களாகவே போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது.இந்நிலையில் தமிழக அரசு இந்த போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தியதையெடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையேயும் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மாவடடங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழக காவல்துறையின் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் போதை பொருள் சிறப்பு தடுப்பு பிரிவு குழு ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் 3காவலர்கள் அடங்கிய 4பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது கஞ்சா புழக்கத்தை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.இந்த நிலையில் நேற்று மாலை காஞ்சிபுரம் ஆழ்வார் பங்களா சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இந்த குழுவினருக்கு வந்த தகவலையெடுத்து அங்கு மப்டியில் சென்ற போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை அழைத்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு முரணாக பேசிய நிலையில் அவரை சோதனை செய்ததில் 10 கிராம் எடை கொண்டு 10 கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது.இதனையெடுத்து சிவகாஞ்சி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர் ஓரிக்கை பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பதும் மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியாக பணியாற்றி வருவதும் தெரிந்திருக்கிறது.
மேலும் அவரது தொலைபேசியை சோதனை செய்த போது அதில் பல்வேறு குற்றவாளிகளுடன் சேர்ந்து இவர் புகைபடம் எடுத்து கொண்டதும், தொடர்பிலிருந்ததும் தெரியவந்தது.
அதே போல் மாண்டூகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியில் தேவிகா என்பவருக்கு சொந்த வீட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தனது நண்பர்கள்களுடன் சேர்ந்து கொண்டு கஞ்சா விற்பனை செய்து வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதனையெடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டின் மாடியில் இவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டதில் அங்கு வெடிமருந்து பொருட்களை கொண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்தலிலும் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி கரமான காட்சியை காவல்துறையினர் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.
இதனையெடுத்து அங்கிருந்த 1கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நான்கு நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இரவு முழுவதும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 20-க்கும் மேற்பட்ட அதிவிரைவு படையினரும் குவிக்கப்பட்டு தற்போது தொடர் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் வரவழைக்கப்பட்டு அந்த அறையிலிருந்து 4நாட்டு வெடிகுண்டுகள், 500கிராம் வெடி மருத்துகள், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய ஆணி, பாஃல்ஸ், வெடிகள் என அனைத்தையும் கைபற்றி பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
மேலும் சிவகாஞ்சி போலீசார் சிவசங்கரனிடம் மேற்கொண்ட கிடுக்குபிடி விசாரணையில் அப்பகுதியில் இவர் வீடு எடுத்து கொடுத்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி என்பவனை தங்க வைத்து கஞ்சா தொழில் செய்து வந்தது தெரியவந்திருக்கிறது.
மேலும் தொழில்போட்டி காரணமாக அவர்களுக்கு எதிர் துருவமாக செயல்பட்டு வந்த கஞ்சா வியாபாரியை கொலை செய்ய சதி தீட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணியானது முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் 4நாட்டு வெடிகுண்டுகளும்,வெடி மருந்து பொருட்களும் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments