பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கும் முதியோர் இல்லங்கள் ... ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் / ஓய்வு கால இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன இவற்றில் சில பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
வழக்கு எண்.515/2018, திரு.S.கிருஷ்ணமூர்த்தி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு மேற்படி நபரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக வரப்பெற்று மாண்பமை உயர்நீதிமன்றம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்2007 ன் கீழ் அரசு சில அறிவுரைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்களில் உணவு மற்றும் ஊட்டச்சத்து, 24 மணிநேரம் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவதேவை, சுத்தமான குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ பாதுகாப்பு, பொழுதுபோக்கு மற்றும் சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து முதியோர் இல்லங்களும் தவறாமல் கட்டாயம் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியினை 31.08.2022 க்குள் முடித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து முதியோர் இல்லங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை..! முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேலும் முதியோர் இல்லங்களில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம், முதல் தளம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்.044-27239334) அணுகவும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொிவித்துள்ளார்.
நான் சர்வாதிகாரியை போல செயல்படுவேன்... கடமையை செய்ய தவறக் கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments