தமிழ்நாடு காவல்துறையின் 27 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!
புதுடெல்லி:
இந்திய அரசு 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 27 அலுவலர்களுக்கு இந்திய இந்தியக் குடியரசுத் தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது.
சுதந்திரதினத்தையொட்டி மொத்தம் 1,082 காவல் பணியாளர்களுக்கு காவல்துறை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன
Police Medal for Gallantry (PMG)
இவற்றில் வீரச்செயலுக்கான காவல் பதக்கங்கள் 347 பேருக்கு வழங்கப்படுகின்றன.
President’s Police Medal for Distinguished Service (PPM)
மிகவும் சிறப்புமிக்க குறிப்பிடத்தக்க சேவைக்கான குடியரசு தலைவரின் காவல்துறை பதக்கம் 87 பேருக்கு வழங்கப்படுகிறது.
Police Medal for Meritorious Service (PM)
சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் 648 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
347 வீரச்செயல் விருதுகளில் பெரும்பாலானவை ஜம்மு & காஷ்மீரில் துணிச்சலான செயல்களுக்காக 204 பணியாளர்களுக்கும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணிச்சலான செயல்பாட்டிற்காக 80 பணியாளர்களுக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் துணிச்சலான செயல்களுக்காக 14 பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. தீரச்செயல் விருதுகளைப் பெற்றவர்களில், 109 பேர் சிஆர்பிஎஃப், 108 பேர் ஜே & கே காவல்துறை, 19 பேர் பிஎஸ்எஃப், 42 பேர் மகாராஷ்டிரா, 15 பேர் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
மிகவும் சிறப்புமிக்க சேவைக்கான குடியரசு தலைவரின் பதக்கங்களை தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் பெறுகின்றனர். சிறந்த சேவைக்கான காவல் பதக்கங்களுக்கு தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த மூன்று அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
1. தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு ஏடிஜிபி சங்கர்,
2. நுண்ணறிவு பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி,
3. சேலம் வடக்கு நகர் டிஎஸ்பி மாடசாமி
ஆகிய மூன்று பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான (PPresidents Police Medal for Meritorious Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த 24 அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்
1. நஜ்முல் ஹோடா, காவல்துறை ஆணையாளர் சேலம் மாநகரம்
2.ஜா.முத்தரசி, காவல் கண்காணிப்பாளர் II, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை
3.ஜி.நாகஜோதி காவல் துணை ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு-I, பெருநகர காவல் சென்னை
4. ம.சுதாகர், காவல் கண்காணிப்பாளர். காஞ்சிபுரம் மாவட்டம்
5. டி.சண்முக பிரியா, காவல் கண்காணிப்பாளர், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு, சென்னை
6. ஏ.மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர். மேற்கு சரகம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சென்னை
7.ச.சரவணன், காவல் கண்காணிப்பாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சென்னை
8. பா.ராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, புதுக்கோட்டை
9. கோ.வேல்முருகன். காவல் உதவி ஆணையர் இணையதள குற்றப்பிரிவு மத்திய குற்றப்பிரிவு, பெருநகர காவல் சென்னை
10. த. சவரிநாதன் காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் காவல் கட்டுப்பாட்டு அறை. சென்னை
11. புருஷோத்தமன், காவல் துணை கண்காணிப்பாளர். மெட்ரோ – II குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை
12. சா.ஜெயதுரை ஜான் கென்னடி, காவல் துணை கண்காணிப்பாளர் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு சென்னை
13. ரா.தனராசு, காவல் துணை கண்காணிப்பாளர், தாராபுரம் உட்கோட்டம், திருப்பூர் மாவட்டம்
14. கே.கௌதமன், காவல் துணை கண்காணிப்பாளர், சிறப்புப் புலனாய்வு பிரிவு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை
15. தி.சரவணன், காவல் உதவி ஆணையாளர், நுண்ணறிவு பிரிவு. சேலம் மாநகரம்
16. மா.சுதேசன் காவல் ஆய்வாளர்.தக்கலை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
17. த. வீரகுமார், காவல் ஆய்வாளர், சி-2 யானை கவுணி காவல் நிலையம், வடக்கு மண்டலம் பெருநகர காவல் சென்னை
18. சா.சுப்புரவேல், காவல் ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை
19. தி.ராபின் ஞானசிங் காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, திருநெல்வேலி
20. த. சூரியகலா, காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மதுரை
21. எஸ்.பவுல் பாக்கியராஜ், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 5. ஆம் அணி ஆவடி
22. நா. வெங்கட சுப்ரமணியன், காவல் உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை
23. க.செல்வராஜ், காவல் உதவி ஆய்வாளர். தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி சென்னை
24. தா.அந்தோணி தங்கராஜ், சிறப்புக் காவல் தவி ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை நகரம் III சென்னை
Click here 👉awarded Medals List
Click here 👉 Medals list Name
Click here 👉 Medals list Name








No comments
Thank you for your comments