Breaking News

சுற்றுலாத் தொழில்முனைவோருக்கு விருதுகள் அறிவிப்பு... விண்ணப்பிக்க கடைசி தேதி 26-08-2022

சுற்றலாத்துறை அமைச்சர் அவர்கள் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலாத் தொழில்முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது..



அத்தகைய முக்கிய அறிவிப்பாகும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக்கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில்முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளைச் செயற்படுத்தும் சுற்றுலாத்தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். 

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமானநிலையங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளின் முதல் பதிப்பு 27.09.2022 அன்று வழங்கப்படும்.

விருது வகைகள் பின்வருமாறு:

1. Best Inbound Tour operator

2. Best Domestic Tour operator

3. Best Travel partner

4. Best Airline partner

5. Best Accommodation

6. Best Restaurant

7. Tamil Nadu Tourism Development corporation star performer

8. Best Niche Tourism Operator

9. Best Adventure Tourism and Camping site Operator

10. Best Meetings Incentives Conference and Exhibition (MICE) Organizer

11. Best Social Media lnfluencer

12. Best Tourist Guide

13. Best Advertisement on Tamil Nadu

14. Best Tourism Promotion Publicity Material

15. Best Educational Institution for Tourism and Hospitality

மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில்முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துக்கொள்கிறார். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2022) சென்னையில் வழங்கப்படும்.

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் 
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்

அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும் .விண்ணப்பங்களை மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில்முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துக்கொள்கிறார்.

நான் சர்வாதிகாரியை போல செயல்படுவேன்... கடமையை செய்ய தவறக் கூடிய அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை  - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தை (27.09.2022) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2022 ஆகும்

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments