மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரிய வாய்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த அரிய வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை 25.08.2022 முதல் 07.09.2022 வரை சென்னை கலைவாணர் அரங்கம், அண்ணா சாலையில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான மதி சாராஸ் மேளாவில் கலந்து கொண்டு விற்பனை செய்ய அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2022-23 ஆம் ஆண்டு மண்டல அளவிலான மதி சாராஸ் மேளா, அனைத்து மாநில சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி 25.08.2022 முதல் 07.09.2022 வரை சென்னை அண்ணா சாலை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாகவும்,
பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாகசெஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா - முழு தொகுப்பு
இதில் நமது மாவட்டத்திற்கு மூன்று அரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சிறப்பு வாய்ந்த மற்றும் தரமுள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இக்கண்காட்சியில் பங்குபெற விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட மேம்பாட்டு அலுவலகத்தில் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மாதிரி, குழுவின் தீர்மான புத்தகம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் 18.08.2022க்குள் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்
இந்த அரிய வாய்ப்பினை மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
.jpg)
No comments
Thank you for your comments