அரசு ஆயூஸ் மருத்துவர்களுக்கான சதுரங்க போட்டி
சேலம், ஆக.1-
சேலம் ஆயூஸ் மருத்துவத் துறை சார்பில் சேலம் ரோட்டரி மிட்டவுண் கிளப் உடன் இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 44-வது சர்வதேச சதுரங்க விளையாட்டை ஊக்கிவிக்கும் வகையில் அரசு ஆயூஸ் மருத்துவர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்களைக்கொண்டு சதுரங்க பலகை காட்சிப்படுத்தப்பட்டு 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இறுதியாக போட்டியில் கலந்து வெண்டவர்களுக்கு சேலம் மிட் டவுண் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் தாரை ராஜகணபதி, வெற்றிவேந்தன், மற்றும் உறுப்பினர் ஆனந்த், ஆனந்த்ராஜ், இந்நிகழ்ச்சியின் நடுவராக ஷர்ஷா அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற பெற்ற வர்களுக்கு பரிசு கொடுத்து கவுரிக்விக்கப்பட்டனர்.

No comments
Thank you for your comments