வேளாண் உபகரணங்கள் திட்டத்தின்கீழ் பயனடைந்த விவசாயிகள்... வெற்றிக் கதைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண் உபகரணங்கள் திட்டத்தின்கீழ் பயனடைந்த விவசாயிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தெரிவித்துள்ளார்கள்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்ததனால் தமிழகத்தின் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாய பணிகளுக்கு இலவச மின்சாரம், விவசாய விலைபொருட்களை விவசாயிகளே விற்பனை செய்து இடைத்தரகர்கள் இன்றி தங்கள் விலை பொருட்களை விற்று அதிக இலாபம் ஈட்ட உதவும் உழவர் சந்தை திட்டம் , விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி , ஏரி குளங்கள் மறு சீரமைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை தனது ஆட்சி காலத்தில் செயல்படுத்தி காட்டினார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கென்று தனி பட்ஜெட், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண் உபகரண தொகுப்பு வழங்கும் திட்டம், தார்பாலின், ஜிப்சம் மற்றும் சிங்க் சல்பேட் ஆகியவற்றை 50% மானியத்தில் வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக காவேரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் வாய்க்கால்கள் தூர்வார ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூபாய்.5,158 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற திட்டங்களை காவேரி டெல்டா விவசாயிகளுக்கு செயல்படுத்தினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் 24.12.2021 அன்று தலைமை செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் வேளாண் உபகரண தொகுப்பு வழங்கும் திட்டத்தினை அறிவித்ததனைத் தொடர்ந்து 1 இரும்புச்சட்டி, 1 மண்வெட்டி, 2 களைக்கொத்திகள், 1 கதிர் அரிவாள் ஆகிய 6 உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.2700க்கு மிகாமலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.2250க்கு மிகாமலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் வாயிலாக சிறு, குறு விவசாய பெருமக்களின் உழைப்பு திறன் மேம்படுத்தப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. வேளாண் உபகரண தொகுப்புகள் வாங்கி பயன்பெற்ற காஞ்சிபுர மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். திரு. ரமேஷ் செல்வ என்ற விவசாயி கூறுகையில் நான் காஞ்சிபுரம் மாவட்ட வரதராஜபுரம் கிராம நெல் விவசாயி.
தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மைத்துறை சார்பாக விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்தார்கள். இத்திட்டத்தில் மானிய விலையில் கருவிகள் வேண்டி படப்பை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உழவன் செயலி மூலம் விண்ணப்பித்தேன்.
முன்னுரிமை அடிப்படையில் எனக்கு பண்ணை உபகரணங்களான 1 இரும்புச்சட்டி, 1 மண்வெட்டி, 2 களைக்கொத்திகள், 1 கதிர் அரிவாள் ஆகிய 6 உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்பட்டது. இது போன்ற திட்டங்கள் உழவு செய்யும் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
விவசாயிகள் உலர்கலன்களை பயன்படுத்த இயலாத மழைக் காலங்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் தானிய இழப்புகளை குறைக்கும் நோக்கத்தில் நகரும் உலர் கலன் (தார்பாலின்) 50% மானியத்தில் வழங்கும் திட்டமும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் தார்பாலின் வாங்கி பயனடைந்த
திரு. அருள் ராஜ் என்ற விவசாயி கூறுகையில் உத்திரமேரூர் வட்டார ராவத்தநல்லூர் கிராம விவசாயியாகிய நான் தார்பாலின் 50% மானியத்தில் வழங்கும் திட்டத்தினை அறிந்து வேளாண்மைத் துறையில் உரிய முறையில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டேன். தனியார் கடைகளில் ரூபாய் 5000 ற்கு விற்கப்படும் தார்பாலின் வேளாண் விரிவாக்க மையங்களில் 50% மானியத்தில் அதே தரத்தில் ரூபாய் 841 ற்கு வழங்கப்படுவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் எங்களைப் போன்ற விவசாயியிக்கு மிகுந்த இலாபம் தருவதாகவும் உள்ளது.
விவசாய பெருமக்களுக்கு இதுபோன்ற திட்டங்களை அள்ளித் தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் உள்ளங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு. சக்திவேல் என்ற விவசாயி கூறுகையில், நான் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மருதம் கிராமத்தில் எனக்கு சொந்தமான விளைநிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.
நெல் அறுவடைக்காக வேலையாட்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. அறுவடை இயந்திரங்களும் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வர வேண்டிய நிலமை உள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் தொடர்பாக வேளாண் பொறியியல் துறை சார்பில் தெரிந்து கொண்டு விண்ணப்பம் செய்தேன்.
ரூ. 24.91 இலட்சம் மதிப்பில் அறுவடை இயந்திரம் ரூ. 8.8 இலட்சம் மானியத்துடன் பெற்றுக்கொண்டேன். இந்த அறுவடை இயந்திரம் எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது மற்ற விவசாயிகளுக்கும் குறைந்த வாடகையில் அறுவடை பணிகளை செய்து கொடுத்து வருகிறேன். இவ்வாறு விவசாயிகளின் துயரங்களை துடைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் நாங்கள் என்றென்றும் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்போம். மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமதி. கௌசல்யா என்ற விவசாயி கூறுகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் வட்டம் ஆசுர் கிராமத்தில் எனக்கு சொந்தமான விளைநிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.
2 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வரும் நான் தமிழ்நாடு வேளாண் இயந்திரமயமாக்குதல் மற்றும் வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டங்களை தெரிந்து கொண்டு மானிய விலையில் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை பெற இணையத்தில் பதிவு செய்து கைப்பேசியில் குறுஞ்செய்தியின் மூலமாக மானிய விலையில் டிராக்டர் 2 WD (70-PTO HP) இயந்திரம் பெற்றேன். இதன் மொத்த மதிப்பு ரூ. 8.105 ஆகும். அதில் 50 சதவீதம் மானியமாக ரூ.4.05 பெற்றேன்.
இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி என்னை போன்ற ஏழை சிறு குறு விவசாயிகளின் வாழ்வாராரத்தை பேணி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாமைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் அனைத்து விவசாய பெருமக்கள் சார்பாக எங்களது உள்ளங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொகுப்பு :
திரு.ப.கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.




No comments
Thank you for your comments