Breaking News

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேருவதற்கு கால நீட்டிப்பு என்று காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு மாணவர் சேர்க்க நடைபெற்று வருகிறது.



ஏற்கனவே, இப்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு தபால் மூலமாகவோ, துரிதஞ்சல் மூலமாகவோ அனுப்பியவர்கள் மட்டும் 05.09.2022 தேதி மாலை 05.30 மணிக்குள் மேலாண்மை நிலையத்திற்கு நேரிடையாக வருகை தந்து பயிற்சி கட்டணம் முழுவதும் அல்லது இரண்டு தவணைகளில் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.6, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631 501 என்ற முகவரியிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.



No comments

Thank you for your comments