Breaking News

11வது வேளாண்மைக் கணக்கெடுப்பு... துவக்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11வது வேளாண்மைக் கணக்கெடுப்பு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டா்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் 26.08.2022 அன்று துவக்கி வைத்தார்.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11வது வேளாண்மைக் கணக்கெடுப்பு, மாவட்ட ஆட்சித்தலைவர், டாக்டா்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் 26.08.2022 அன்று துவக்கி வைத்தார்.      

1970-1971ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கொரு முறை இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகம், வேளாண்மைக் கணக்கெடுப்பினை நடத்தி வருகிறது. 

தற்போது,   2021-2022-ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கெடுப்பிற்கான களப்பணி 01.09.2022 முதல் நடைபெறவுள்ளது.

வேளாண்மைக் கொள்கைகளை வடிவமைப்பதற்குத் தேவையான முக்கிய காரணிகளான, நிலப் பரப்பு கைப்பற்றுகளின் எண்ணிக்கை மற்றும் பரப்பு விவரங்கள், வகுப்பு வாரியான கைப்பற்று எண்ணிக்கை, குத்தகை நிலை, மற்றும் நில உபயோகம், போன்ற விவரங்கள் இக்கணக்கெடுப்பின் வாயிலாக சேகரிக்கப்படவுள்ளது.

முதன்முறையாக இக்கணக்கெடுப்புப் பணிக்கான தரவுகள் கைபேசி செயலி வாயிலாக சேகரிக்கப்படுகிறது, இதனால் கணக்கெடுப்பு பணி முன்னேற்ற விவரங்ளை உடன் நிகழ் முறையில் கண்காணிப்பதுடன் இறுதி கட்ட முடிவுகள் களப்பணி முடிவுற்றதும் வெளியிடப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மைக் கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான திரு.கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் திரு.கு.சுந்தரராஜ், காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர்கள், காஞ்சிபுரம் கோட்டப் புள்ளி இயல் உதவி இயக்குநர் மற்றும் வட்டாரப் புள்ளி இயல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments