Breaking News

அம்பேத்கார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவிப்பு.. விசிக சாலை மறியல்..

 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரத்தில் மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புள்ள  அம்பேத்கார் சிலைக்கு  மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்தால் பெரும் பரபரப்பு... விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில் முன்பு உள்ள  அம்பேத்கர் சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர்.


கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில் சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி.....  நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

அதனையடுத்து அம்பேத்கர்  சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட செய்தி அறிந்து ஏராளமான  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்வாரிய அலுவலகம் முன்பு குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



மேலும் இது குறித்து தகவலறிந்து  காஞ்சிபுரம் கோட்ட டி.எஸ்.பி ஜூலியர் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டு காவி உடை போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்த நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் தொடர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் மின்சார வாரிய அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்திலுன்  ஈடுபட்டதால் சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

தொடர்ந்து விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்..அதேபோல் ஏதேனும்  அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏராளமான போலீசாரும் தொடர்ந்து அங்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments